சென்னை, எழும்பூர், காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் அதற்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு காரைக்குடி, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடையே 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன என்று தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு கிளம்பும் அதிவேக விரைவு ரயில் 17, 19, 24 மற்றும் 26 உள்ளிட்ட தேதிகளிலும் மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10:50 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 16, 17, 19 மற்றும் 25 உள்ளிட்ட தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு கிளம்பும் அதிவேக விரைவு ரயில் 22, 24 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளிலும் மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கிளம்பும் அதிவேக விரைவு ரயில் 23, 26 மற்றும் 28 உள்ளிட்ட தேதிகளிலும் இயக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலக்காட்டில் இருந்து கிளம்பும் பாலக்காடு, திருச்செந்தூர் விரைவு ரயிலும், திருச்செந்தூரில் இருந்து கிளம்பும் திருச்செந்தூர், பாலக்காடு விரைவு ரயில் 9ம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.