தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னர் தான் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த குழுவின் இந்த வருடத்திற்கான கட்டண நிர்ணயம் அறிவிக்கப்படும் முன்னதாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளனர். ஆகவே அளவுக்கதிகமாக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.