தில் ராஜு தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகியிருந்தது.
வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியதாக சொல்லப்பட்டது. பொங்கலுக்கு இந்த திரைப்படத்திற்கு போட்டிக்காக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட உலக அளவில் வாரிசு திரைப்படம் அதிக வசூலித்ததாக சொல்லப்பட்டது.
He is very happy about result and Pongal winner
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2023#AskDilRaju https://t.co/BDeGlF74pi
இத்தகைய நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிசல்ட்டை பார்த்து நடிகர் விஜய் என்ன தெரிவித்தார் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்கள் தில் ராஜு தன்னுடைய வலைதள பக்கத்தில் பதில் தெரிவித்திருக்கிறார்.
அதாவது வாரிசு பொங்கல் வின்னர் என்று குறிப்பிட்டு இருக்கும் அவர், விஜய் இதனால் தான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.