fbpx

+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றும் விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு வேலூரில் சோகம்…..!

வேலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள துத்திப்பட்டு பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் விமல்ராஜ் (48) டைலரான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஸ்ரீ நித்தியா (18) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஸ்ரீநித்தியா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதில் அவர் வெற்றி பெற்றும் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீ நித்தியா மேற்படிப்புக்கு இடம் கிடைக்குமா? என்ற கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நித்தியா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அவருடைய குடும்பத்தினர் அவரை வைத்து அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அதன் பிறகு காலநிலத்தில் புகார் வழங்கப்பட்டதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகள்..!! மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!!

Wed May 10 , 2023
உலகளவில் இதய நோயினால் இறக்கக் கூடியவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயினால் இறப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது, இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் அதிக விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் ஒரு முக்கியமான காரணி உங்கள் உணவுமுறைதான். ஆரோக்கியமான உணவுமுறையானது அதிக கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துக் […]

You May Like