தொடர்களுக்கு பெயர் போன சன் டிவியை தொடர்ந்து, விஜய் டிவியில் தான் தற்போது பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதன் காரணமாக, விஜய் தொலைக்காட்சி பல்வேறு தொடர்களை புதிதாக களமிறங்கி உள்ளது.
ஒரு சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர உள்ளதால் புத்தம் புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. ஆஹா கல்யாணம், பொன்னி உள்ளிட்ட புதிய தொடர்களின் விளம்பரங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த புதிய தொடர்கள் மிக விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன.
புதிய தொடர்கள் மிக விரைவில் வருகை தர உள்ளதால் பழைய தொடர்களின் நேரங்கள் வரும் 20ம் தேதி முதல் மாற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி எந்தெந்த தொடர்கள் எந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று தற்போது நாம் காணலாம். அதாவது தமிழும், சரஸ்வதியும், ராஜா ராணி 2 ,ஆஹா கல்யாணம் உள்ளிட்ட தொடர்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தமிழும், சரஸ்வதியும் மாலை 6:00 மணி, ராஜா ராணி 2 ,மாலை 6:30 மணி ஆஹா கல்யாணம் மாலை 7 மணி என தொடர்கள் இனிவரும் காலங்களில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.