fbpx

ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3000 திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திலைலேயே மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்க வந்த ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்போது வரையில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் மாணவிகளுக்குதொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பதறி அடித்து மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Baskar

Next Post

குடித்துவிட்டு பாடம் நடத்திய பெண் ஆசிரியர்... வகுப்பறையில் இருந்து மது பாட்டில் பறிமுதல்..!

Fri Sep 9 , 2022
கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அந்த ஆசிரியர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. மேலும், லெட்சுமால் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்திவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை எதையும் பொருட்படுத்தாமல் ஆசிரியை கங்கா லெட்சுமால் […]

You May Like