fbpx

தமிழ்நாட்டில் 18 ஆம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!

கடந்த 9ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகின்ற 18ஆம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதாவது, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், நாளை முதல் வரும் 17ஆம் தேதி வரையில் புதுவை, தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் வரும் 18ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் என்ற வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், நடு, நடுவே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம்.

அதேபோன்று, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். நடு,நடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் இந்த காற்று அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிப்பதற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’மார்க்கெட் போன ஹீரோயினுடன் அந்த காட்சி வைங்க’..!! யோகி பாபுவின் உண்மை முகம் இதுதானா..?

Wed Dec 14 , 2022
சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்த நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி முன்னேறி இருக்கிறார் அந்த காமெடி நடிகர். ஆரம்பத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த அவர், தற்போது காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்கி கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் இந்த நடிகர் இப்போது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் வேறு யாரும் அல்ல சமீபத்தில் தாதா திரைப்படத்தில் நான் […]
’மார்க்கெட் போன ஹீரோயினுடன் அந்த காட்சி வைங்க’..!! யோகி பாபுவின் உண்மை முகம் இதுதானா..?

You May Like