fbpx

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது…..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய ஆலோசனை…..!

தமிழகத்தின் 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 9 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்தனர். அதேபோல எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்தது.

10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. அதே நேரம் மூன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகின்றது. இத்தகைய சூழ்நிலையில், இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகையான பள்ளிகளுக்குமான வேலை நாள் இன்றுடன் நிறைவு பெறுகிறது இறுதி நாளில் மீதம் உள்ள தேர்வு மட்டும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான ஆலோசனை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், அதேபோல எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 2வது வாரத்தில் வெயில் குறைந்த பின்னர் பள்ளிகள் ஆரம்பமாகும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Next Post

மீண்டும் குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…..! 3 நாட்கள் தொடர் விடுமுறை….!

Fri Apr 28 , 2023
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதியில் தொடர்ந்து விடுமுறைகள் விடப்பட்டு வந்தனர். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்சமயம் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டதால் வெளியூர்களில் பணியாற்றும் […]

You May Like