fbpx

இணையதளத்தின் மூலமாக ஆதார் அட்டையில் எந்தெந்த விவரங்களை நாமே மாற்றிக் கொள்ளலாம்?

தொடக்கத்தில் இந்த ஆதார் கார்டு என்ற ஒரு அடையாள ஆவணம் வருவதற்கு முன்னர் இது எதற்காக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்று யாருக்குமே தெரியாது. அதோடு ஏதோ அரசாங்கத்தில் வழங்குகிறார்கள், நாமும் வாங்கி வைத்துக் கொள்வோம் என்ற நினைப்பில் தான் அனைவரும் இந்த ஆதார்கார்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார்கள்.

ஆனால் பின்னாளில் இந்த ஆதார் கார்டு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு ஒருவருக்கு இல்லை என்றால் அவர் இந்த நாட்டில் வசிப்பதற்கான தகுதியற்றவர் என்ற அளவில் கூட செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டனர்.

இந்த ஆதார் அட்டையில் ஏதாவது தவறு இருந்தால் அது எல்லா அடையாள அட்டைகளிலும் பிரச்சனைகளாக வந்து நிற்கும். ஒரு தரவில் இருப்பதைப் போல ஆதாரில் இல்லை என்றால் அதை சரியான ஆவணம் இல்லை என்று நிராகரித்து விடுவார்கள். அப்படி இருக்கும்போது ஆதாரில் இருக்கின்ற தகவல்கள் முற்றிலும் சரியாக இருப்பதை நாம் உறுதி செய்ய கடமைபட்டுள்ளோம்.

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு இ சேவை மையங்களுக்கும், ஆதார் சேவை மையங்களுக்கும் தான் செல்ல வேண்டுமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஆதார் அட்டையில் இருக்கக்கூடிய சில விவரங்களை வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம். அது தொடர்பான விவரங்களை தற்போது நாம் காணலாம்.

ஆதார் இணையதள சேவையின் மூலமாக தங்களுடைய பெயர் பாலினம் பிறந்த தேதி முகவரி மொழி உள்ளிட்டவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.ஆதார தகவலை புதுப்பிக்க பின்வரும் வரம்புகள் பொருத்தமாக இருக்கும். அதாவது, ஒருவரின் பெயரை வாழ்நாளில் 2 முறை மாற்றிக் கொள்ளலாம், பாலினத்தை வாழ்நாளில் ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். பிறந்த தேதியை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

தங்களுடைய பெயரில் இருக்கின்ற சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலமாக திருத்திக் கொள்ள முடியும். முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

பெயரில் இருக்கின்ற எழுத்து திருத்தங்களை மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் தன்னுடைய சான்றிதழில் முத்துலெட்சுமி என இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளலாம். அதேபோல தான் ஆங்கிலத்தில் இருக்கின்ற எழுத்து திருத்தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

வரிசை மாற்றம் ஒரு சிலருடைய பெயரில் இறங்கு மூன்று பகுதிகள் இருக்கும் தற்போது சதாசிவ ராமகிருஷ்ணன் என்று இருக்கிறது, அதனை ராமகிருஷ்ணசதாசிவம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

பெயர் பகுதிகளுக்கு இடையே இடைவெளி சேர்க்க முடியும் எடுத்துக்காட்டாக ராகுல் கிருஷ்ணன் என்று தனி தனியாக ஆதார் அட்டையில் இருக்கிறது ஆனால் மற்ற ஆவணங்களில் ராகுல்கிருஷ்ணன் என இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

அதேபோல இனிஷியலோடு பெயர் இருந்தால் அதனை விரிவாக மாற்றிக் கொள்ளலாம். அதாவது பம்மல் கே சுந்தரம் என்று இருந்தால் பம்மல் கல்யாண சுந்தரம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப பெயர் மாற்றம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள இயலும். அதனைத் தவிர்த்து மற்ற எந்த விதமான மாற்றங்கள் பெயரில் இருந்தாலும் சேவை மையங்களைத் தான் அணுக வேண்டும்.

Next Post

அடக்கடவுளே ஒரு ஆசிரியருக்கு இவ்வளவு கோபம் வரலாமா? மாணவனை மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்த ஆசிரியர்!

Tue Dec 20 , 2022
பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்று மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரையில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துகின்றன. இது போன்ற தாக்குதலால் மாணவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்துள்ள ஹாக்லி கிராமத்தில் ஒரு அரசு […]
கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!

You May Like