fbpx

2024 ஆம் ஆண்டு குவாட் மாநாடு இந்தியாவில்…..! மகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி…..!

பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி ஆறு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார் அங்கு சென்ற அவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கே இருக்கிறார் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜப்பான் நாட்டிற்கு வந்திருக்கிறார்.

இந்த நிகழ்வை அடுத்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகளின் கூட்டமைப்பான கூட்டமும் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்போனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெளிப்படையான ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த குவாட் அமைப்பின் பிரதான நோக்கம் உலக நலன் மக்களின் நல்வாழ்வு வளம் மற்றும் அமைதியை நிலை நிறுத்துவதற்கு குவாட் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் வெற்றியும், பாதுகாப்பும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே ஆக்கபூர்வமான நோக்கங்களை ஜனநாயக பூர்வமான முறையில் நாங்கள் செயல்படுத்துவோம் அடுத்த ஆண்டு குவாட் மாநாட்டை இந்தியாவில் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக இந்த உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் அமெரிக்காவில் தற்போது நிலைபெறும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்பாக கவனம் செலுத்துவதற்காக தன்னுடைய ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்தி வைப்பதாக கூறினார். இதன் காரணமாக, இருந்த இந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டம் கடைசி சமயத்தில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெறும் ஜப்பானுக்கு மாற்றப்பட்டது.

Next Post

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினம்….! சோனியா மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அஞ்சலி…..!

Sun May 21 , 2023
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோறும் மலர் தூவி அஞ்சலி […]

You May Like