fbpx

மோடியின் மருமகள் என்று தெரிவித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 21 லட்சம் அபேஸ் செய்த பெண்மணி…..! உத்தர பிரதேசம் அருகே பரபரப்பு….!

உத்திரபிரதேசம் மாநிலம் காசியில் உள்ள ஓய்வு பெற்ற கர்னல் உபேந்திரா இவருக்கு உத்தரபிரதேசத்தை சார்ந்த பல்லியா மாவட்டத்தில் உள்ள கோமல் பாண்டே என்ற பெண்ணுடன் கைபேசியின் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொஞ்ச நாட்கள் பின்னர் கோமல் பாண்டி உபேந்திரா ராகவர்க்கு வெரோனிகா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், வெரோனிகா தான் மோடியின் மருமகள் என்று தெரிவித்து உபேந்திரராகவை நம்ப வைத்துள்ளார். அதோடு பங்குச்சந்தையில் அவரை முதலீடு செய்ய சொல்லி அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை தெரிவித்துள்ளார்.

அதோடு பங்குச்சந்தையில் கர்னல் பெயரில் தான் முதலீடு செய்வதாகவும், அதற்கு 21 லட்சம் ரூபாயை தன்னுடைய நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் வெரோணிகா, இதனை நம்பிய அவர், ரமேஷ் ஷர்மா என்பவரின் வங்கி கணக்குக்கு 21 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் அதற்குப் பிறகு அந்த பணம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய போது 18 லட்சத்திற்கான போலிச் செக்கை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார் வெரோணிகா அதற்கு பின்னர் உபேந்திரராகவால் வெரோனிகாவை தொடர்பு கொள்ள இயலவில்லை.

இந்த நிலையில் தான் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தார் உபேந்திரராகவ். ஆகவே இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில், வெரோனிகா மீதும், ரமேஷ் சர்மா மீதும் 420,406 என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் அதோடு ஓய்வு பெற்ற கர்னலிடம் மோடியின் மருமகள் என்று தெரிவித்து பணம் பறித்தது அந்த பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

Next Post

சென்னை அருகே தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை…..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

Wed May 17 , 2023
சென்னை அருகே நற்குன்றத்தை சேர்ந்த மகேஷ் தன்னுடைய தாய் அத்தியம்மாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தன்னுடைய தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் தயாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அதனை தடுக்க வந்த […]

You May Like