ஈரோடு மாவட்டம் பவானி அருகே வர்ணபுரத்தை சேர்ந்த கார்த்தி( 26) இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மீனாதேவி என்ற நபருடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மீனா தேவியின் பெற்றோர் கார்த்திக்கின் உறவினரான பூபதி என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் அவரையே மணந்து கொண்டார் மீனாதேவி. ஆனாலும் கார்த்திக் பூபதியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மீனாதேவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.
அதே நேரம் மீனாதேவி, பூபதி உள்ளிட்ட தம்பதிகளுக்கு 6 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கார்த்திக்கின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக தெரிந்து கொண்ட மீனாதேவி அதிர்ச்சி அடைந்து கார்த்திகை தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கிறார். தன்னை விட்டு, விட்டு வேறொரு பெண்ணை எவ்வாறு திருமணம் செய்து கொள்ளலாம்? என்று அவர் கார்த்திக் உடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மீனாதேவி சமையலறையில் அடுப்பில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த எண்ணெயை கார்த்திக்கின் மீது வீசி உள்ளார். இதில் அவருக்கு கழுத்து, முகம், கை, தோள்பட்டை என்று உடலின் பல்வேறு பகுதிகளில் தீ காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, வலியால் துடித்த அவர், படுகாயத்துடன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தார்.
இந்த சம்பவத்தில் 15 சதவீதம் தீக்காயம் அடைந்த கார்த்திக்குக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி காவல் துறையை சார்ந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று கார்த்திக்கிடம் விசாரணை செய்தனர்.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் மீனா தேவியை கைது செய்ய முடிவு செய்தனர். அதன் பிறகு போலீசார் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது மீனாதேவி அங்கே இல்லை. நாம் கைது செய்யப்படலாம் என்று அச்சம் கொண்ட அவர், கருங்கல்பாளையத்தில் இருக்கின்ற தன்னுடைய தாய் வீட்டில் தஞ்சம் புகுந்து கொண்டார் என்பது காவல்துறையினருக்கு தெரிந்தது. ஆகவே அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.