தற்போதைய இளம் தலைமுறையினர் திருமண வயதை கடந்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் படாத பாடுபட்டு வருகிறார்கள்.அதிலும் 30 வயதை தொட்டுவிட்ட 90ஸ் கிட்ஸ் நபர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
ஆனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விக்தியில் அவர்கள் எடுக்கும் சில அதிரடி முடிவுகளால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்.முன்பெல்லாம் காதல் தான் கண்ணை மறைக்கும் என்பார்கள், ஆனால் தற்போது காமம் கண்ணை மறைத்து விடுகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை அடுத்துள்ள மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (28) டிப்ளமோ இன்ஜினியரான இவருக்கு தந்தை இல்லாததால் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார்.
இவர்களுடைய அண்டை வீட்டை சார்ந்தவர் கமல் தாஸ். இவருடைய மனைவி லைலா (47) இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். ஆகவே வீட்டில் கமல் தாசும் அவருடைய மனைவியும் மட்டுமே ரசித்து வந்தனர்.
இந்த நிலையில், நடந்த சில தினங்களுக்கு முன்னர் லைலா தலையில் காயங்களுடன் சுயநினைவின்றி மயங்கி கிடந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான கணவர் கமல்தாஸ் உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டைச் சார்ந்த எட்வினை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். ஆகவே காவல்துறையினர் தங்களுடைய பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகினர்.
அதாவது, இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும்போது, லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அழுக்கை அறையை எட்டிப் பார்ப்பதையும் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது அழகை ரசிப்பதையும் வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்த பெண்மணி உறவினர். வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது வீட்டிற்குள் திடீரென்று நுழைந்த எட்வின் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்து இருக்கிறார்.
இதன் காரணமாக, லைலா கூச்சலிட்டதால் இரும்பு கம்பியால் அவரை தலையில் அடித்து விட்டு அவரை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் என்ற விவரம் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.இதனை தொடர்ந்து, காவல்துறையினர் எட்வினை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்திருகின்றனர்.