fbpx

களைகட்டிய தனியார் விடுதி!,, போதையில் ஆபாச நடனம் ஆடிய இளம் பெண்கள்: போலீசார் எச்சரிக்கை…!

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. மேலும் ஹோட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது. இந்நிலையில் சென்னையில், பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை உடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் நடைபெறுவதாக அண்ணாசாலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த விடுதியில் அதிரடி சோதனை செய்தனர். அங்கு 30-க்கும் அதிகமான இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறி இருந்த அந்த பெண்கள் அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இதை கண்ட காவல்துறையினர் உடனடியாக அங்கு இசைக்கப்பட்ட இசையை நிறுத்தினார்கள். அங்கு போதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் மீட்டனர். போதையில் இருந்த 30 பெண்களின் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கு போதையில் இருந்த இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளரை காவல் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறையினர் கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட இரவு நடன நிகழ்ச்சி நடத்திய தனியார் விடுதி நிர்வாகம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்யும்.. 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் அறிவிப்பு..

Mon Sep 12 , 2022
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.. […]

You May Like