fbpx

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்…! நடிகர் கமல்ஹாசன் இரங்கல்…!

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார்.

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார். மாரடைப்பால் அவதிப்பட்டு அவர் காலமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவு தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. 1980 களில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தனது தொழில் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றினார். சத்யா, அபூர்வ சகோதரங்கள், மைக்கேல் மதன காம ராஜன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, சூரரைப் போற்று, கோலமாவு கோகிலா, கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனத்தில் பல படங்களில் பணியாற்றினார். விக்ரம் (1986), சத்யா, மைக்கேல் மதன காம ராஜன் போன்ற பல படங்களில் சிவாஜியும் கமலும் இணைந்து நடித்தனர். இவரது மறைவிற்கு நடிகர் கமலஹாசன் தனது பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

அதில், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அச்சுறுத்தும் புதிய கோவிட்-19 மாறுபாடு BA.2.86!… தடுப்பூசி போட்டவர்களை தாக்கும் திறன்கொண்டவை!… அறிகுறிகள்!

Sun Sep 3 , 2023
புதிய கோவிட்-19 மாறுபாடு BA.2.86 அல்லது Pirola’ என்ற புனைப்பெயர் இந்த வகை வைரஸ் தடுப்பூசி பெற்ற நபர்களை தாக்கும் திறன் கொண்டவை என தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரானின் BA.2.86 பரம்பரையானது, XBB.1.5 உடன் ஒப்பிடுகையில் வைரஸின் முக்கிய பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. XBB.1.5, 2023 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய மாறுபாடு ஆகும். கனடா மற்றும் […]

You May Like