fbpx

நியூசி. வங்கதேசம் சுற்றுப்பயணம் : டி20 இந்திய அணி அறிவிப்பு…

டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியவில் நடைபெற்று வருகின்றது. இதில் 12 சுற்றில் இந்தியா விளையாடி வருகின்றது.

இதன் இறுதிப்போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகின்றது. இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகின்றது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அணியில் ரோகித், கோலி, ராகுல் ஆகிய 3 பேரும் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்திக் தலைமையில் இந்த அணி செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 18ல் தொடங்கி நவம்பர் 22 வரை நடைபெறுகின்றது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் 3 போட்டிகள் தொடங்குகின்றது. நவம்பர் 25ல் இப்போட்டி தொடங்குகின்றது. துணை கேப்டனாக ரிஷப் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி வீரர்கள் பெயர்: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள் டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

Next Post

கனமழை...! இந்த 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...! ஆட்சியர்கள் உத்தரவு....!

Tue Nov 1 , 2022
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் […]

You May Like