fbpx

Annamalai: அடுத்தது இந்த திமுக அமைச்சர்தான்!… பைல்ஸ் ரெடி!… மொத்த கோபாலபுரமும் சிக்கும்!… அண்ணாமலை அதிரடி!

Annamalai: தி.மு.க., பைல்ஸ் விரைவில் வெளிவரும். அமைச்சர் தியாகராஜன் ஒரு மணி நேரம் 8 நிமிடம் போனில் பேசிய ஆடியோ பதிவை கேட்டால் மொத்த கோபாலபுரமும் சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, 228 சட்டசபை தொகுதிகளில் யாத்திரை நடந்துள்ளது. பிப்.,27 ல் பல்லடத்தில் முடிகிறது. இது சாதாரண வேள்வி இல்லை. திராவிட அரசியலை வேரோடும், மண்ணோடும் சாய்க்கும் வாய்ப்பாக லோக்சபா தேர்தல் இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடிதான் வெற்றி பெறுவார் என தெரிந்தே நடக்கும் தேர்தல் இது. வரலாற்றில் இது முதல்முறை. தமிழக அரசியல் சுத்தம் செய்யப்படும். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி அகற்றப்படும்.

பொருளாதாரத்தில் உ.பி., 2வது இடம், தமிழகம் 3 வது இடத்தில் உள்ளன. ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாதோ அதை தி.மு.க., செய்கிறது. தமிழகம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. தி.மு.க., 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20ஐ கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் கனவுலகில் உள்ளார்.

2019 லோக்சபா தேர்தலின்போது பா.ஜ., அளித்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சவால் விடுகிறேன். நிறைவேற்றவில்லை என தி.மு.க., கூறினால் நான் அரசியலை விட்டு விலகி மீண்டும் விவசாயம் பார்க்க சென்றுவிடுவேன். தி.மு.க., தொண்டர்களே மோடிக்குத்தான் ஓட்டுப்போடுவர். தி.மு.க.,வை அக்கட்சி தொண்டர்களே தோற்கடிப்பர். தி.மு.க., பைல்ஸ் விரைவில் வெளிவரும். அமைச்சர் தியாகராஜன் ஒரு மணி நேரம் 8 நிமிடம் போனில் பேசிய ஆடியோ பதிவை கேட்டால் மொத்த கோபாலபுரமும் சிக்கும் என்று பேசியுள்ளார்.

Readmore:தேர்தல் நேரத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மற்றும் ஆடியோ பதிவுகள்…! அண்ணாமலை அதிரடி…!

Kokila

Next Post

Vijayadharani:இரவோடு இரவாக பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!… விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல்!

Sun Feb 25 , 2024
Vijayadharani: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் […]

You May Like