Murder:சத்தியமங்கலம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் இருந்த தந்தை, மருமகனைக் கொலை செய்ய முயன்றபோது, அவரது 15 வயது தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு சுபாஷ் (21) என்ற மகனும், ஹாசினி (15) என்ற மகளும் உள்ளனர். சுபாஷ் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி ஓட்டி வருகிறார். ஹாசினி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் மஞ்சுவை சுபாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுபாஷ், மஞ்சு இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், வழக்கம்போல், சுபாஷ் தங்கை ஹாசினியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் எரங்காட்டூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சுபாஷ் மனைவி மஞ்சுவின் தந்தை பிக்கப் வேனால் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சுபாஷ் மற்றும் அவரது தங்கை ஹாசினி படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹாசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சந்திரனுக்கு சொந்தமான விவசாய தோட்டத்து வீட்டில் இருந்த கார் மற்றும் இரண்டு பைக்குகளை தீ வைத்தனர் எரித்தனர். இதையடுத்து தன்னை கொல்ல முயன்றாக சுபாஷ் அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு சென்னையில் ஆணவக்கொலையில் இளைஞர் உயிரிழந்த நிலையில், ஈரோட்டில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை சதியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: தொடர் விடுமுறை..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!