தொடர் விடுமுறை..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

special busses: இன்று மஹா சிவராத்திரி, நாளை மற்றும் நாளை மறுநாள், சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால், போக்குவரத்து கழகம் தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, நேற்றைய தினம்(மார்ச் 7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக 270 சிறப்பு பேருந்துகளும், இன்று(மார்ச் 8) 390 பேருந்துகளும் நாளை 430 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள், தலா 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிறுக்கிழமை சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் நேற்றைய தினம் 9,096 பயணிகளும், இன்று (வெள்ளிக்கிழமை) 7,268 பயணிகளும், நாளை(சனிக்கிழமை) 3,769 பயணிகளும், ஞாயிறுக்கிழமை 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

RPF: கடந்த ஒரே மாதத்தில் காணாமல் போன 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்பு ...!

Fri Mar 8 , 2024
2024, பிப்ரவரியில், ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். ரயில்வே சொத்து, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை 2024 பிப்ரவரி மாதத்தில், குழந்தை செல்வங்கள் மீட்பு எனும் நடவடிக்கை மூலம், பெற்றோர்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீட்டதுடன், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 521-க்கும் அதிகமான குழந்தைகளை […]

You May Like