fbpx

அடுத்த ஷாக்..!! லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்..!! எந்த கோயிலில் தெரியுமா..?

திருப்பதி லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நெய்யில் கலப்படம் செய்திருப்பது உறுதியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகளவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் ஓய்வதற்குள் பழனி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான், மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டிருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் இருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ. வுமான சதாசர்வன்கர் கூறுகையில், வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் எங்கோ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Read More : மக்களே இலவசம்..!! மின்வாரியத்தின் அறிவிப்பை பாருங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சூப்பர் சான்ஸ்..!!

English Summary

A video of rats biting and damaging the tray and lattu packets in the Siddhi Vinayagar temple and the presence of baby rats is circulating on social media.

Chella

Next Post

வெளிமாநில பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! பணம் தராததால் அதிமுக நிர்வாகியை ஓட விட்ட பெண்..!!

Wed Sep 25 , 2024
The woman, who was already angry at not paying her, said, "Are you beating me?" asked and attacked the administrator in return.

You May Like