fbpx

Next Stop: The Moon..!! சந்திரயான் – 3 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இஸ்ரோவின் முக்கிய அறிவிப்பு..!!

நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூ.615 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. விண்கலம் 127609 km x 236 km சுற்றுவட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்காணிப்புக்கு பிறகு இந்த சாதனை குறித்து பகிரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், விண்கலம் 5 அடுக்கு கொண்ட புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து, சந்திரயான்-3 ஆகஸ்ட் 5, 2023இல் சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து…..! திடீரென்று குறுக்கே வந்து இருசக்கர வாகனம் பற்றி எரிந்த பேருந்து காவலருக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

Tue Aug 1 , 2023
இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ எந்த வாகனமாக இருந்தாலும், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் அவசியம். அப்படி கவனமாக செயல்பட்டாலும் கூட பல நேரங்களில் இந்த வாகனங்களால் ஆபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்திலும் சரி, நான்கு சக்கர வாகனத்திலும் சரி தற்போது தீப்பிடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கம்பம் ட்ராவல்ஸ் என்ற […]

You May Like