fbpx

“அடுத்த டார்கெட் சூரியன்”..!! “தயார் நிலையில் ஆதித்யா எல்-1”..!! மயில்சாமி அண்ணாதுரை கொடுத்த அப்டேட்..!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த டார்கெட் சூரியனை நோக்கித்தான் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி சந்திரயான் – 3 புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 5இல் நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் சந்திரயான் நுழைந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது.

அனைத்துக்கட்ட முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு சந்திரயான்-3 நேற்று மாலை நிலவில் தரையிறங்க தயாரானது. லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையில் இருந்து 800 மீட்டர் உயரத்தை வந்தடைந்ததும், அதுவரை சாய்ந்தவாறு இருந்த விண்கலத்தின் கால்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக செங்குத்தாக கீழ்நோக்கி திருப்பப்பட்டது. மிகவும் பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அடுத்த சில நிமிடங்களில், இஸ்ரோவுக்கு லேண்டர் குறுஞ்செய்தி அனுப்பியதும் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், ”சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றி, ஒரு வரலாற்று நிகழ்வு. 2008ஆம் ஆண்டு சந்திரயான் – 1 திட்டத்தின் மூலம் முதல் நிலவுப் பயணம் தொடங்கியது. தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை அது உறுதி செய்தது. இதையடுத்து, சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஆனால், இறுதிச் சுற்றில் பணியை நிறைவு செய்ய முடியவில்லை.

தற்போது சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாகச் சென்றடைந்து தரையிறங்கியுள்ளது. சந்திரயான் – 1 வெற்றி மற்றும் சந்திரயான் – 2 திட்டத்தில் ஏற்பட்ட சிறிய சறுக்கல்களில் பாடம் கற்றுக்கொண்டு, சந்திரயான் – 3 விண்கலத்தைச் செலுத்தி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம். அடுத்த டார்கெட் சூரியனை நோக்கிய ஆதித்யா பயணம் தான். ஆதித்யா L1 செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும். சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1-ஐ ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

Pension Schemes | மக்களே..!! இந்த ஓய்வூதியத் திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? எவ்வளவு நன்மைகள் பாருங்க..!!

Thu Aug 24 , 2023
இந்தியாவின் வசிக்கும் குடிமக்கள் பயன்பெறும் வகையில், மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மக்கள் தங்களின் ஓய்வு காலத்தில் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை (Pension Schemes) அமல்படுத்தியிருக்கிறது. அதில், அடல் ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்பு, தேசிய சமூக உதவி திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அடங்கும். அடல் ஓய்வூதிய திட்டமானது கடந்த […]

You May Like