தென் மாவட்டங்களை தொடர்ந்து 3 பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி, திருநெல்வேலியில் காலத்திற்கும் நின்று பேசும் வரலாற்று சிறப்புமிக்க மழையை கொடுத்த காற்றழுத்த சுழற்சி அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது.
இரண்டு நாட்களில் அது மறைந்துவிடும். தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வறண்ட வானிலையே தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.