சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா தள்ளிப்போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. குறிப்பாக நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை ஜெகன்மோகன் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதேநேரம் இந்தத் தேர்தலில் பக்காவான வியூகத்துடன் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவரது கூட்டணியில் இருந்த பவன் கல்யாண் கட்சி 21 இடங்களில் வென்று ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அங்குள்ள 175 தொகுதிகளில் 135இல் வென்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடு பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்பட்டது. சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. இதற்கிடையே இது இப்போது தள்ளிப் போய் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Read More: ‘நடிகை கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைவிட்ட CISF வீரர்!’ விளக்கம் அளித்த கங்கனா!!