fbpx

அடுத்த வாரம்..!! கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!! தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகம்..!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவரது கட்சி களமிறங்கவில்லை.

தற்போது விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். இதற்கிடையே தற்போது மாவட்டம், சட்டசபை தொகுதி வாரியாக நடிகர் விஜய் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். மேலும் பெண்கள், இளம் தலைமுறையினரின் வாக்குகளை கவரும் வகையில் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் போட்டோவும் எடுத்து கொண்டார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அடுத்த வாரம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் விஜய்..? முதல்வர் வேட்பாளர் கூட அவர்தானாம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

It has been reported that the flag of Tamil Nadu Victory Kazhagam party will be introduced next week.

Chella

Next Post

பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்..!! 20 வயசு தான் ஆகுது..!! ரசிகர்கள் இரங்கல்..!!

Fri Jul 19 , 2024
Actor and producer Krishan Kumar's daughter passed away yesterday. He was 20. He was battling cancer for a long time and passed away yesterday, his family said

You May Like