fbpx

தொழில் முறையில் தவறு… ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் உத்தரவு…!

பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம்

திருவாளர் சுப்பிரமணியம் பெங்காலி மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலி தொழில் முறையில் தவறாக நடந்துகொண்டதால், அவரை 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனமும் அல்லது கார்ப்பரேட் அமைப்பும் சட்டப்பூர்வ தணிக்கையாளராகவும், உள் தணிக்கையாளராகவும் பணியமர்த்த தடை செய்து நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 132 (4)ன் படி தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் (என்எஃப்ஆர்ஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவருக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

கணக்கு தணிக்கையும் ஆறு தரங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய தணிக்கையாளர் தவறிவிட்டார். 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, கட்டாயம் தேவை என குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனை விவரங்களை இவர் பணி செய்த டிடிஎம்எல் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதேபோல் சம்பந்தப்பட்ட நபர் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை. டிடிஎம்எல் நிறுவனம் வங்கி சாராத நிதிநிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தவறான தகவலை தணிக்கையாளர் தந்துள்ளார்.

Vignesh

Next Post

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் எதை சாப்பிட வேண்டும் தெரியுமா?

Tue Sep 20 , 2022
சிலருக்கு மட்டும் அவர்களின் சருமம் மினுமினுப்பாக இருப்பதை பார்த்திருப்போம் .. அவரது சருமம் அழகாக உள்ளதே என நினைக்கும் நாம் .. அதற்காக என்னசெய்யவேண்டும் என்பதை நாம் கேட்காமல் விட்டிருப்போம்… சருமம் ஆரோக்கியமாகஇருக்க நாம் எதை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்… சிகை அலங்காரமும் .. விதவிதமான காஸ்மெட்டிக் பொருட்களும் தோலுக்கு உணவாக இருக்கும் என்று.. ஆனால் ஆரோக்கியமான சருமத்திற்கு திறவுகோல் காஸ்மெட்டிக் […]

You May Like