fbpx

சாலை அமைத்தால் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…! மத்திய அரசு உத்தரவு ‌‌‌‌‌…!

கழிவுப் பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உரத்துறை, ரசாயனம் மற்றும் உர அமைச்சம் ஆகியவற்றோடு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒருங்கிணைந்து, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பாஸ்பர் – ஜிப்சம் பயன்படுத்துவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஜிப்சம் பயன்படுத்தப்படும் போது, சுழற்சிப் பொருளாதார நிலை ஏற்படும். பாஸ்பர் – ஜிப்சம் கலவையானது உர உற்பத்தியின் போது கிடைக்கப்பெறும் இணைப் பொருளாகும். இந்தக் கலவையைப் பயன்படுத்தி ஒரு இந்திய உர நிறுவனம் சாலையைக் கட்டமைத்துள்ளது. இந்தச் சாலையை, மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதையடுத்து இந்திய சாலை அமைப்பால் அங்கீகாரம் 3 ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தாக்க நடவடிக்கையின் விளைவாக புதிய பொருட்கள் மூலம் கார்பன் பயன்பாட்டைக் குறைத்து, நீண்ட நாட்களுக்கு சேதமடையாமல் இருக்கும் சாலைகளை அமைத்து, சாலைக் கட்டமைப்பை குறைந்த மதிப்பீட்டில் நிறைவேற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Vignesh

Next Post

#Breaking..!! ஆஃப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!!

Thu Feb 23 , 2023
ஆஃப்கானிஸ்தான் ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 113 கி.மீ. ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.25 மணிக்கு மீண்டும் ஃபைசாபாத்தில் இருந்து 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக […]
#Breaking..!! ஆஃப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!!

You May Like