பஞ்சாப், ஜம்மு உள்ளிட்ட 14 வெவ்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
பயங்கரவாதம் தொடர்பான வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியில் 14 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான காலிஸ்தான் விடுதலைப் படை, பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்றவற்றின் தலைவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி என்ஐஏ தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
நேற்று நடத்தப்பட்ட சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரணையானது தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.