ஹைதராபாத் நகரை சேர்ந்த இளம்பெண் நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை வரவேற்ற அவரது நண்பரான மாணிக் சர்மா, ஜான்கிபுரம் என்ற பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் அறைக்கு வந்த மாணிக் சர்மா மற்றும் அவரது நண்பர்களான துக்காராம் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண் ஜான்கிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஜான்கிபுரம் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆண் நண்பர் வேலை வாங்கி தருவார் என்ற நம்பி சென்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.