fbpx

அதிரடி…! நிபா வைரஸ் பரவல்… இன்று முதல் 3 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை….!

நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மாஹேவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழில்முறை நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் இன்று முதல் 17 வரை விடுமுறை என மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா தெரிவித்துள்ளார். தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் அனைத்து அங்கன்வாடிகள், மதரஸாக்கள், டியூஷன்/பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் நிபாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் / சந்தைகளுக்கு தேவையற்ற வருகைகளை மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிப்பா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துகளின் வார்டுகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களை ஏற்படுத்தி உள்ளார். கோழிக்கோடு முழுவதும் தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

ஏலியன்கள் இருப்பது உண்மையா?… இன்று UFO அறிக்கையை வெளியிடுகிறது நாசா!

Fri Sep 15 , 2023
பூமியின் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்படும் விவரிக்கப்படாத பறக்கும் பொருள்கள்(ஏலியன்கள்) குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய முயற்சியில் நாசா பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பிரபஞ்ச ரகசியமாக இருக்கும் பறக்கும் தட்டுக்கள்(UFO) குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் 16 பேர் கொண்ட சுதந்திரமான குழு […]

You May Like