fbpx

நிர்மலா சீதாராமனுக்கு ’வக்கிர புத்தி’..!! ’இது எவ்வளவு கீழ்த்தரமா இருக்கு பார்த்தீங்களா’..? வெளுத்து வாங்கிய தயாநிதி மாறன்..!!

அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்துக்கு என்று தனியாக எந்தவொரு சிறப்பு திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ”கடந்தாண்டு தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்தார். அவங்க ஆட்கள் இருக்கும் கோயில் பகுதிக்கு மட்டும் சென்ற அவரிடம், ஒருவர் கோயில் கட்டுமானம் பற்றி கூறினார்.

அந்த சமயம் ஒருவர் கோயில் உண்டியலில் பணம் போட வந்தார். அவரிடம், ‘கோயில் உண்டியலில் காசு போடாதீங்க. அது மாநில அரசுக்கு சென்றுவிடும். அர்ச்சகர் தட்டில் தட்சணை போடுங்க’ என கூறினார். அதனை, ”வக்கிர புத்தி” என கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன், அடுத்ததாக, ”அதே போல நாங்களும் தமிழக மக்களிடம் நீ வரி கட்டாதே, வரி கட்டினால் நம்ம பணம் டெல்லிக்கு சென்றுவிடும் என நாம் கூறலாமா.? அது எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் பார்த்தீர்களா.? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், மக்களின் வலி அவருக்கு தெரியாது” என பேசினார்.

Read more : வீட்டிற்கு தோழியை அழைத்து வரும் மனைவி..!! போதை வஸ்து கொடுத்து பலாத்காரம் செய்யும் கணவன்..!! தொழிலே இதுதானாம்..!!

English Summary

DMK MP Dayanithi Maran, who participated in the protest in Chennai, criticized Finance Minister Nirmala Sitharaman.

Chella

Next Post

தனி நபரின் நிலத்தை பஞ்சமி நிலமாக அறிவித்த அதிகாரி..!! சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

Sat Jul 27 , 2024
The Madras High Court has ordered an interim stay on the order converting the land of an individual into Panchami land.

You May Like