அம்பானி குடும்பத்தின் முக்கிய அங்கமாக உள்ளவர் நீதா அம்பானி(Nita Ambani), தனது திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1985 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியை மணந்த, நீதா அம்பானி Sunflower Nursery School-லில் ஆசிரியராக பணியாற்றியதாவும், அங்கு தன்னுடைய மாதம் சம்பளம் ரூ.800 என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பு, Narsee Monjee College கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றிருந்த நீதா அம்பானி, தனது ஆசிரியர் பணியை தொடங்கினார். இருப்பினும், முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன்பு தனக்கு ஒரு நிபந்தனை இருந்ததாக நீதா அம்பானி கூறினார். அதாவது, அவர் தொடர்ந்து கற்பித்தல் பணியை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு நேர்காணலில் கூறினார். அதனால்தான் நீதா திருமணத்திற்குப் பிறகும் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
‘ரெண்டெஸ்வஸ் வித் சிமி கரேவால்’ என்ற அரட்டை நிகழ்ச்சியில் அவர் இதைச் சொன்னார். அந்த நேரத்தில் பலர் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், ஆனால் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது தனக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்ததாகவும் நிதா அம்பானி நினைவு கூர்ந்தார்.
அப்போதிருந்து, ரிலையன்ஸ் அறக்கட்டளை பள்ளிகளை நிறுவுவதில் நீதா அம்பானி முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்தப் பள்ளிகள் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்தப் பள்ளிகள் ஜாம்நகர், சூரத், வதோதரா, தஹேஜ், லோதிவலி, நாகோதேன், நாக்பூர் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படுகிறது.
கல்விக்கான தனது அர்ப்பணிப்பு மூலம் நீதா அம்பானி பல குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க அவர்கள் உதவுகிறார்கள். நீதா அம்பானி ஒரு நல்ல நடனக் கலைஞரும் கூட. அவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர். நீதா சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் செய்து வந்தார்.
Read more : தந்தையின் இறுதிச்சடங்கில் மோதல்.. சடலத்தை இரண்டாக வெட்டக் கோரிய மகன்கள்..!! கொடூரத்தின் உச்சம்