Nithyananda: 2019 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி ஓடி “கைலாசா என்ற இறையாண்மை கொண்ட தேசத்தை நிறுவியதாகக் கூறி, தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிவியாவின் அமேசான் காடுகளில் வாழும் மூன்று பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், நித்யானந்தாவின் கைலாசா அமைக்க நில ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு அறிக்கையின் படி, “யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா” (The United States of Kailasa) பொலிவியாவின் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினரை ஏமாற்றி, 3,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள முக்கிய நிலத்தை 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலம் டெல்லியை விட 2.6 மடங்கு, மும்பையை விட 6.5 மடங்கு, பெங்களூருவை விட 5.3 மடங்கு, கொல்கத்தாவின் அளவை விட 19 மடங்கு பெரியது. இந்த மோசடி ஒப்பந்தம் “கைலாசா ஐக்கிய நாடுகள்” முழு சுயாட்சி மற்றும் நிலத்திற்குள் உள்ள அனைத்து வளங்களுக்கும் முழுமையான உரிமைகளை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கு 1,08,000 அமெரிக்க டாலர்களுக்கு (ரூ. 8.96 லட்சத்திற்கு சமம்) கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது. பொலிவிய அரசாங்கத்திற்கு இந்த ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் இல்லை. பொலிவியா அரசு இந்த நில ஒப்பந்தம் குறித்து தகவல் அறிந்தவுடன், பழங்குடியினர் கூட்டமைப்பான “Confederation of Indigenous People of Bolivia” உடன் இணைந்து, இந்த ஒப்பந்தத்தை முற்றிலும் செல்லுபடியாகாதது (null and void) என்று அறிவித்தது.
பொலிவியா சட்டப்படி, வெளிநாட்டவர்கள் அமேசான் காடுகளில் நிலம் பெற முடியாது. இதை உறுதிப்படுத்தும் வகையில், பொலிவியாவின் வேளாண் மேம்பாட்டு துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பழங்குடி மக்கள் ஒரு கற்பனையான நாட்டோடு ஒப்பந்தங்களைச் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். 2010-ல், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், நித்யானந்தாவுக்கு எதிராக பாலியல் வன்முறை வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2019 நவம்பர் மாதத்தில், வழக்கை எதிர்கொள்வதற்குப் பதிலாக நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார்.
பின்னர் “யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா” (The United States of Kailasa – USK) எனும் ஒரு தன்னாட்சி நாடாக நித்யானந்தா, அறிவித்தார். கைலாசாவின் சரியான புவியியல் இருப்பிடம் (geographical location) யாருக்கும் தெரியவில்லை. யுஎஸ்கேவின் வலைத்தளம் “150+ க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் இந்து புலம்பெயர்ந்தோரை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி, “இறையாண்மை சுயநிர்ணய உரிமையை” பயன்படுத்துவதாகவும், “இந்து ஆட்சி மற்றும் இந்து நிர்வாகத்தின் காலத்தால் சோதிக்கப்பட்ட மாதிரியை” பின்பற்றுவதாகவும் அறிவிக்கிறது.
நித்யானந்தா தன்னை மிகுந்த இந்து மதத்தின் உச்ச மத தலைவன், உலக ஆசான் & மகா சந்நிதானம், தெய்வீக புனிதர், பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம், 19 பண்டைய இந்து அரசுகளின் உரிமையான பேரரசர் என்றெல்லாம் அழைத்துக்கொள்கிறார். “ஒரு தசாப்தத்திற்கும் மேலாக துன்புறுத்தலுக்கு தான் ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார் நித்யானந்தா, அதாவது, 70 க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 250 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 120 பொய் வழக்குகள், 17,000 மணி நேரத்திற்கும் “தொலைக்காட்சி செய்தி பிரசாரம் எனக்கு எதிராக நடைபெற்றுள்ளது”. என்னைக் குறைகூறும் வகையில் 25,000-க்கும் மேற்பட்ட பத்திரிகை கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை இன்றைய காலத்தில் “இந்துக்களின் படுகொலை (Hindu Holocaust)” என்ற ஒரு தொடர்ச்சியான அழிவின் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகின்றனர். இது கடந்த 7 நூற்றாண்டுகளாக 80 மில்லியன் (8 கோடி) இந்துக்கள் இனப்படுகொலைக்கு உட்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். அவர்கள் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள், கொடூரமான இன அழிப்பின் (ethnocide & genocide) சாட்சிகள் என்று காட்டிக்கொள்கின்றனர்.
Readmore: ஏப்ரல் 30 வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!