இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். ஆனால் கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி உள்ள நித்தியானந்தாவோ, யூ டியூபில் தவறாமல் வீடியோ வெளியிட்டு ஆன்மீக் சொற்பொழிவாற்றி வருகிறார். இதனிடையே நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களால பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. அவர் இறந்துவிட்டதாக கூட அதிர்ச்சி தகவல் வெளியானது..

இதையடுத்து தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்ட நித்தியானந்தா, தான் சமாதி நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.. தனக்கு எந்த நோய்கள் இல்லை எனவும், தன்னால் உணவு உண்ண முடியவில்லை எனவும், பேச முடியவில்லை எனவும் கூறியிருந்தார்..
இந்நிலையில் நித்தியானந்தா தனது உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி இலங்கையில் புகலிடம் கோரியுள்ளார். தனது நாடான கைலாசாவில் மருத்துவ பற்றாக்குறையைக் குறிப்பிட்டு, தனக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்று இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நித்தியானந்தாவின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், ‘சிகிச்சை தேவை’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் “ கைலாசத்தில் உள்ள மருத்துவ வசதிகளால் எனது உடல்நிலையை கண்டறிய முடியாத நிலையில் தனக்கு மருத்துவ உதவி தேவை.. எனது உடல் நிலையை மனதில் கொண்டு, அரசியல் புகலிடத்தை வழங்குமாறு உங்கள் மாண்புமிகு இலங்கை அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.. இதனால் அவர் விமான ஆம்புலன்ஸ் மூலம் விமானம் மூலம் அனுப்பப்பட்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் பாதுகாப்பாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
இலங்கையில் ஏற்படும் அனைத்து மருத்துவ செலவுகளையும் கவனித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் நன்றியின் வெளிப்பாடாக, மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள அந்த மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக விட்டுச் செல்கிறோம்” என்று நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்..
நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த போது, ஆன்மீகம் என்ற பெயரில் பெண் சீடரை ஐந்து வருடங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நித்யானந்தா மீது இந்திய சட்டப்பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்), 420 (ஏமாற்றுதல்), 114 (குற்றம் தூண்டுதல்), 201 (ஆதாரம் காணாமல் போனது, தவறான தகவல்களை அளித்தல்), 120பி (குற்றச் சதி) மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..