அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பசுமை போக்குவரத்து தீர்வுகள் மீதான வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருவதால், மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசின் தொலைநோக்கு, கொள்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.