தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இவர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சினிமாவில் மட்டும் இல்லாமல், கார் ரேஸ் மற்றும் விளையாட்டுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் மற்ற முன்னணி நடிகைகளை போல் நிவேதா பெத்துராஜ் இன்னும் பெரிய அளவில் வரவில்லை என்றாலும் இவரைப் பற்றிய பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருந்தன. அந்த வகையில், இவரையும் உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து கிசு கிசுக்கள் வெகுவாக இணையம் முழுவதும் வெளி வந்தது.
இதையடுத்து, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தன்னை பற்றி தொடர்ந்து இந்த மாதிரி சர்ச்சைகள் வருவதால் என் பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்திய ஒரு பேட்டியில் கிளாமரில் நடிப்பது குறித்து பகிர்ந்துள்ளார். பெரும்பாலும் இவர் தமிழில் ஹோம்லியான தோற்றத்தில் தான் நடித்தார்.
மேலும், அப்படி ஹோம்லியாகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் சினிமாவிலேயே நுழைந்தாராம். ஏனென்றால், கிளாமராக நடிப்பதால் தன் குடும்பத்தையும் பெற்றோரையும் நண்பர்களையும் பாதித்து விடக்கூடாது என்று அவர் நினைத்துள்ளார். ஆனால் தெலுங்கில் அளவாய்குண்டபுரம், தம்கி போன்ற படங்களில் கிளாமராக நடிக்க தொடங்கி விட்டேன் எனக் கூறினார்.
ஆனால் அதை தனது பெற்றோர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும், இப்போது அவர்களுடன் சேர்ந்து நான் என் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், என் படங்களை என் பெற்றோருடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Read more: தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடும் ஒரே தமிழ் படம் இது தான்..! கண்டிப்பா ரஜினி, விஜய் படம் இல்ல..