2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சினிமாவில் மட்டும் இல்லாமல், கார் ரேஸ் மற்றும் விளையாட்டுகளில் இவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. இந்நிலையில், இவரையும் உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து கிசு கிசுக்கள் வெகுவாக இணையம் முழுவதும் வெளி வந்தது. .
அந்த வகையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று, பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. ஆம், அந்த பெட்டியில் அவர் பேசும் போது, ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் மட்டும் தான் நடித்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில், கவர்ச்சியாக நடித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. அதனால், தெலுங்கில் ஆள வைகுந்தபுரம் என்ற திரைப்படத்தில் கிளாமராக நடித்தேன். அதன் பிறகு, டம்கி என்ற படத்திலும் நடித்தேன். ஏன் இப்படி நடிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த படங்களில் கிளாமராக நடித்துப் பார்த்தேன். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றார். தொடர்ந்து, “இது போன்ற காட்சிகளில் நடிக்க, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஏதும் கேட்கவில்லையா?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்க்கு அவர், அது போன்ற படங்களில் நடிக்கும் போது, என்னுடைய நிலை என்ன என்பது என் குடும்பத்தினருக்கு நன்கு தெரியும் அதனால் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அது மட்டும் இல்லாமல், குடும்பத்தோடு உட்கார்ந்து தான் அந்த படத்தை பார்த்ததாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். இவர் கூறிய இந்த காரியம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Read more: சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?