fbpx

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்..!! பிக்பாஸ் வீட்டுக்குள் ரவுடித்தனம்..!!

இன்று காலை பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்த பலரும் உச்சகட்ட பரபரப்போடு இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நிக்சன், அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான். அதன்படி, அடுத்தடுத்து வெளியான ப்ரோமோக்களில் நிக்சனின் உச்சகட்ட ரவுடித்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா வினுஷா விவகாரத்தை கையில் எடுத்தது தான்.

இதனால் கடுப்பான நிக்சன், இப்போது அர்ச்சனாவை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், அவர் அர்ச்சனாவை பார்த்து காரி துப்பி நீ பெரிய இவளா, சரிதான் போடி, சொருகிடுவேன் என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்த வருகின்றனர்.

ஆனாலும், அவர் நான் ஏற்கனவே இதுக்காக மன்னிப்பு கேட்டுட்டேன். திரும்ப அதை பத்தி பேசக்கூடாது என அதிகபட்ச ஆக்ரோஷத்தில் கத்தி கூச்சலிடுகிறார். இவ்வளவு அக்கப்போர் நடந்தும் கூட பிக்பாஸ் நிக்சனை தடுத்து நிறுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இதை வைத்தே விஜய் டிவி டிஆர்பியை அதிகரிக்க பிளான் போட்டிருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. அதனாலயே இப்படி ஒரு ரவுடித்தனத்தை சேனல் தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, சென்னை பெய்த மழை காரணமாக இந்த வார ஓட்டிங்கை நிறுத்தியது விஜய் டிவி. ஆனாலும், தற்போது நிக்சனின் நடவடிக்கைகள் எல்லை மீறி கொண்டிருக்கிறது. கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பெண்களை வர்ணிப்பதும், அவதூறாக பேசுவதுமாக இருக்கும் இவர் நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு தகுதி இல்லாதவர். அதனால் இவரை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் இப்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Chella

Next Post

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை..!! சித்ரவதை காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Thu Dec 7 , 2023
சீன வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கின் காங் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங் திடீரென மாயமானார். அவரை பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், ஜூலை மாதம் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கின் காங்கிற்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]

You May Like