இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றானது என்எல்சி. இந்த நிறுவனத்தில் தொழில்துறை பயிற்சியாளராக பணி புரிவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant (CA), Cost and Management Accountant (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : NLC வயது வரம்பை பொறுத்த வரையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ பி சி பிரிவினருக்கு 31 வயதும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 33 என வயது தளர்வு உண்டு.
மாத ஊதியம் : இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ www.nlcindia.in தளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2024 என தெரிவிக்கப்பட்டது.
Read more ; World Heart Day 2024 : உங்கள் இதயத்தை தினமும் கவனிக்கிறீர்களா..? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..