கடலூர் மாவட்டம் வளையயமாதேவி கிராமத்தில் என் எல் சி அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்ட போது ஒரு பெண் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு என்எல்சி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 4வது நாளாக என்எல்சி கால்வாய் வெட்டும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் என்னுடைய நிலத்தை அளவீடு செய்ய நீங்கள் யார் உடனடியாக நிலத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின் அங்கு வந்த பெண் விவசாயி ஒருவர், என்எல்சியின் கால்வாய் அமைக்கும் பணியின் காரணமாக, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வாரிசுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருப்பதாகவும் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக, நில அளவை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அளவிடும் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு, அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.