fbpx

இந்தியாவிலேயே NO.1..!! மீண்டும் முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு..!! எதில் தெரியுமா..?

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள் குறித்த ஆய்வை ’இந்தியா டுடே இதழ்’ நடத்தியது. இதில் 2022ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த செயல்திறன்’ கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், கேரளா 3ஆம் இடத்திலும், குஜராத் 4ஆம் இடத்திலும், பஞ்சாப் 5ஆம் இடத்திலும் உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவிலேயே NO.1..!! மீண்டும் முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு..!! எதில் தெரியுமா..?

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”INDIA TODAY இதழ் நடத்திய ஆய்வில் ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் 2022 ம் ஆண்டிற்கான ‘சிறந்த செயல்திறன்’ கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இது முதலமைச்சர் முக.ஸ்டாலினின் ஆளுமைத் திறனுக்கான அங்கீகாரம்” என பதிவிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரிவுகளுக்காக இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தமிழக அரசிடம் சலுகைகள் பெற வேண்டும் என்றால் இனி இது மிக முக்கியம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

Fri Dec 16 , 2022
கடந்த 2017 ஆம் வருடம் ஆதார் தொடர்பான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.ஆனால் அதற்கு முன்பு ஆதார் அட்டையை அனைத்து அரசு திட்டங்களுக்கும் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அதற்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டனர். அத்துடன் தற்போது தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய திமுக இந்த ஆதார் மசோதாவிற்கு மிக கடுமையான எதிர்ப்பை அப்போது பதிவு செய்தது.இந்த நிலையில் தான் […]

You May Like