fbpx

தாய்ப்பால் சுரப்பு இல்லையா?… இந்த ஹெல்த் ட்ரிங்கை ட்ரை பண்ணுங்க!… தயாரிக்கும் முறை இதோ!

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் வகையில் எளிமையான ஹெல்த் ட்ரிங்க் எப்படி தயாரிப்பது என்பது குறித்தில் இதில் அறிந்துகொள்வோம்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது. தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நவீன காலத்தில் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க வகையில் எளிதாக தயாரிக்க கூடிய பானங்களும் உண்டு. அவற்றில் ஒரு பானத்தை தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த பானம் தாய்ப்பால் சுரப்பு போதவில்லை என்பவர்களுக்கும் தாய்ப்பால் சுரப்பு இல்லை என்பவர்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.

தேவையான பொருட்கள்: பால் – 1 டம்ளர், பேரீச்சை – 4, பாதாம் – 5 ( தோல் உரித்து ஊறவைத்தது), முந்திரி – 5, உலர் திராட்சை – 8, பிஸ்தா – 3, வால்நட் – 1, பூசணி விதைகள் – ஒரு டீஸ்பூன் (தேவையெனில்). செய்முறை: பாதாமை ஊறவைத்து தோல் உரித்து வைக்கவும். இதனுடன் பேரீச்சை கொட்டை நீக்கி, முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா, வால்நட், பூசணி விதைகள் அனைத்தையும் அரைத்து கொள்ளவும். பின்பு
பாலை காய்ச்சி அதில் இந்த அரைத்த பொடியை சேர்த்து கொடுக்கவும். இதனுடன் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க போதுமான இடைவெளியில் குழந்தைக்கு பால் கொடுங்கள். இது படிப்படியாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். இளந்தாய்மார்கள் உடலை நீரேற்றத்தோடு பார்த்துகொள்ள வேண்டும். அதனால் திரவ ஆகாரங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் இளந்தாய்மார்களுக்கு கர்ப்பகாலம் போன்று தாய்ப்பால் காலங்களிலும் தினசரி 1000 மிகி கால்சியம் இருக்க வேண்டும். பாலில் கால்சியம் நிறைவாக உள்ளது. பேரீச்சை ருசியை மட்டும் அளிப்பதில்லை. இதில் பல சத்துக்கள் உள்ளது. இதை தினசரி அளவாக எடுக்கும் போது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. ஆய்வு ஒன்றின் படி பேரீச்சம்பழம் அதிக ஆற்றலை கொடுக்க கூடியது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்றவற்றை அளிக்கிறது. இது உடலில் புரோலாக்டின் என்னும் ஹார்மோனை அதிகரிக்க செய்கிறது. இது வெந்தயம் போன்று தாய்ப்பாலை அதிகரிக்க செய்திடும்.

Kokila

Next Post

மாங்கொட்டையில் இவ்வளவு மருத்துவ பயன்களா!... பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை!... ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

Thu Feb 23 , 2023
மாங்கொட்டை தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும். மேலும் இதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம். இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு மாங்கொட்டை பெரிதும் […]

You May Like