fbpx

27 மாதங்களில் ரயில் மோதி யானைகள் இறப்பு நிகழவில்லை..!! – தெற்கு ரயில்வே

பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு ஏதும் நிகழவில்லை என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தெற்கு ரயில்வே தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜராகினார். பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு ஏதும் நிகழவில்லை: உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சார்பில் பதிலளித்துள்ளது. யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 9 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறிய சென்சார் கேபிள்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது.

மேலும் அப்பகுதியில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரங்களிலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது என்றும் கடந்த 2022-ம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பாலக்காடு போத்தனூர் ரயில் வழித்தடங்களில், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தெரிவித்தார்.

Read more: 10-ம் வகுப்பு முடித்து இருந்ததால் போதும்… BEL நிறுவனத்தில் மாதம் ரூ.90,000 வரை ஊதியம்…!

English Summary

No elephants have died from train collisions in 27 months..!! – Railways

Next Post

ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்..!! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Mon Mar 31 , 2025
It will be hotter than usual till June..!! - India Meteorological Department

You May Like