fbpx

தூள்…! ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை…! எஸ்பிஐ விளக்கம்…!

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை‌ என வங்கி கிளைகளுக்கு எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை டெண்டர்தாரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்களுடன் ஒரு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தவறான தகவல் அதுபோன்று எந்த ஒரு உத்தரவும் வங்கிகள் பிறப்பிக்கவில்லை என எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது.

Vignesh

Next Post

பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் மரணம்...!

Mon May 22 , 2023
பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் உயிரிழந்தார். பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா, மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராநகரில், படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் திடீரென எதிரே வந்த போது சுசந்திரா பிரேக் போட்டதால் சுச்சந்திரா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார், அதைத் தொடர்ந்து அந்த வழியாக […]

You May Like