கார்களில் ஏசி போட்டாலும் கூலிங் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது என்றால் கீழ்க்கண்ட நடைமுறைகளை கடைபிடித்து பாருங்கள். உடனே உங்களது கார் கூலிங் ஆகிவிடும்.
கோடைக்காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் வியர்வையிலேயே குளித்து விடும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே போகவே அஞ்சும் நிலை உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் 100 டிகிரி என்கிற அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துவிட்டது. பல இடங்களில் வெயில் சதமடிக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயில் கடுமையாக இருக்க போகிறது. இதனால், வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என்று மக்கள் பரிதவிப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், வெப்பம் வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் கார்களில் ஏசி பராமரிப்பு எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். கோடைக்காலங்களில் கார்களில் ஏசி போடாமல் பயணிக்கவே முடியாத நிலை இருக்கும். எனவே, கோடை காலம் துவங்கும் முன்பே கார்களில் ஏசி சரிவர இயங்குகிறதா என சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், திடீரென ஏசி இயங்காமல் போனால், டிரைவர்களுக்கும் காரில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
எனவே, கோடைக்காலத்திற்கு முன்பாக சர்வீஸ் செய்து கொள்வது நல்லது. அதுபோக காரில் செல்லும் போது உடனடியாக ஏசி கூலிங் ஆக வேண்டும் என்றால் கீழ் கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
* காரை எப்போதுமே ஷெட்டில் நிறுத்த முயற்சி செய்யுங்கள். சூரிய ஒளிப்படும் இடத்திற்கு கீழ் அப்படியே நிறுத்தினால் கேபினில் வெப்பம் அளவுக்கதிமாக இருக்கும்.
* காரை பார்க் செய்யும் போது ஜன்னல் கண்ணாடியை முழுவதுமாக மூடாமல், லேசாக திறந்து வைத்திருக்க வேண்டும். காருக்குள் காற்று சென்று வரும் வகையில் வழி ஏற்படுத்தி வைத்திருப்பது அவசியம்.
* எடுத்த உடனேயே முழு full blower mode-ல் ஏசியை ஆன் செய்ய வேண்டாம். ஏசியில் காற்று வரும் வேகத்தை மெதுவாக துவங்கி படிபடியாக கூட்டலாம்.
* ஏசி பில்டரை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தேவைப்பட்டால், மாற்றிக்கொள்ளுங்கள்.
* ஏசி சரியாக இயங்குவதற்கு அதை ரெகுலராக இயக்க பயன்படுத்த வேண்டும். சிறிய தொலைவிற்கு சென்றால் கூட ஏசியை பயன்படுத்துவது நல்லது.
* ஏசி சரிவர கூலிங் ஆகவில்லை என்றால், உடனடியாக சர்வீஸ் செய்ய வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது காரில் பயணம் செய்வது, கொடைக்கானலில் இருப்பது போன்ற உணர்வை தரும்.
Read More : கொளுத்தும் கோடை வெயில்..!! மின் நுகர்வில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு..!!