மின்கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றன. ஆகையால், மின்சாரத்தை சேமித்து கட்டணத்தை குறைக்கும் எளிமையான சில வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சில மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், பல வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், மின் பயன்பாடு பெருகி இருக்கிறது. இந்த சூழலில் கரண்ட் பில் ரூ.5000, ரூ.6000 என கடந்த செல்வதாக மக்கள் புலம்பித் தள்ளுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- அதிக மின்சாரத்தை இழுப்பது ஏசி, வாட்டர் ஹீட்டர், பிரிட்ஜ் மற்றும் அயர்ன் பாக்ஸ் தான். இந்த மூன்றையும் கவனமாக பயன்படுத்தினால் கரண்ட் சிக்கனமாகும்.
- ஏசி பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஸ்டெப்லைசர் சுவிட்சை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால், அது இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.
- ஏசி பயன்படுத்தும் அறையின் ஜன்னல், கதவு இடுக்குகளை அடைத்தால் உடனே குளிர்ச்சியடைந்து மின்சாரம் சிக்கனமாகும்.
- சோலார் வாட்டர் ஹீட்டை பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணங்களை கட்டுப்படுத்த முடியும்.
- அயர்ன் பாக்ஸில் உங்கள் துணிகளை மொத்தமாக இஸ்திரி செய்யுங்கள். தினமும் எடுத்து இஸ்திரி போட்டால் சூடு ஏறுவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும்.
- அடிக்கடி ப்ரிட்ஜ் கதவை திறக்க வேண்டாம். அப்படி திறந்தாலும் உடனே அதை மூடி விட வேண்டும்.
- பிரிட்ஜினை சுற்றி அதிக இடைவெளி இருக்க வேண்டும். அதன் மூலம் பிரிட்ஜின் செயல்பாடு சீராகி மின்சாரத்தை சேமிக்க உதவும்.
- வாஷிங் மெஷினை அதிக துணிகளுடன் இயக்க வேண்டும். குறைவான துணிகளுடன் இயக்கினால் அதிக துணிகளுடன் இயக்கியதற்கான மின்சாரமே செலவாகும்.
- வீட்டில் உள்ள குண்டு பல்புகளுக்கு பதிலாக, சி.எஃப்.எல் அல்லது எல்.ஈ.டி பல்புகளை பயன்படுத்தலாம்.
- நட்சத்திர குறியீட்டினை பார்த்து மின் உபகரணங்கள் வாங்க வேண்டும். அதிக நட்சத்திர குறியீட்டு இருந்தால் குறைவான மின்சாரமே செலவாகும்.
- ஐ.எஸ்.ஐ. முத்திரை பதிக்கப்பட்ட தரமான மின் உபகரணங்கள் மின்சாரத்தை சேமிக்கும்.
- டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்தி முடித்த பின் அதில் உள்ள பவர் பட்டனை மட்டும் அணைக்காமல் மெயிண்ட் ஸ்விட்சையும் அணைத்து விடவிடவும்.
- டியூப் லைட் பயன்படுத்தினால் எலக்ட்ரானிக்ஸ் சோக் பயன்படுத்தலாம்.
- இண்டக்சன் அடுப்புகளை தவிர்த்து கேஸ் அடுப்புகளில் சமையல் செய்யலாம்.
- வேறு வழியின்றி மின் அடுப்பை பயன்படுத்தினால் தட்டையான பாத்திரங்களை உபயோகியுங்கள். அப்படி செய்தால் உடனடியாக சூடாகி மின் செலவு குறையும்.