fbpx

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லையா..? எந்த கட்டணமும் இல்லாமல் ரூ.10,000 வரை எடுக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் பணம் இல்லாதபோதும் ரூ.10 ஆயிரம் எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, பிரதமர் மோடி அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் எந்த வங்கியிலும் பணம் இல்லாமல் கணக்குத் தொடங்கலாம். மேலும், ஜீரோ பேலன்ஸ் இருப்பில் கணக்குகள் திறக்கப்படுகின்றன. இதனுடன், இந்த கணக்கில் பணம் இல்லாதபோதும் ரூ.10,000 எடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு காசோலை புத்தகம், பாஸ்புக், விபத்து காப்பீடு, ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது. அதாவது சில நேரங்களில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை, ஆனால் பணம் தேவைப்படுகிறது என்றால், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை ஓவர் டிராஃப்டில் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கணக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் தொடங்கப்பட்டிருந்தால், அது குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும். அதன் பிறகு, தேவைப்படும் நேரத்தில் ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம். இத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ரூ.2,000 ஓவர் டிராஃப்ட் பெறும் வசதி உள்ளது என்றாலும், 6 மாதங்கள் ஆனவர்கள் மட்டுமே ரூ.10,000 எடுக்க முடியும்.

மேலும், இந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. இந்த கணக்கை எந்த வங்கியிலும் தொடங்கலாம். சாதாரண கணக்குகளைப் போலவே, ஜன்தன் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் வட்டி வழங்கப்படுகிறது. இந்த ஜன்தன் கணக்கை தொடங்குவதன் மூலம் ​​உங்களுக்கு RuPay ATM அட்டை வசதி கிடைக்கும். இதுதவிர ரூ.2 லட்சம் விபத்து காப்பீடும், ரூபாய் 30 ஆயிரம் காப்பீடும் வழங்கப்படுகிறது.

Chella

Next Post

பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்..!! விஜய் டிவி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

Fri Aug 18 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஷோ என்றால், அது பிக்பாஸ் தான். 100 நாட்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு தங்களுடன் விளையாடும் போட்டியாளர்களுடன் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது. இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் விரைவில் […]

You May Like