fbpx

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு Cash on Delivery கிடையாது..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்தியாவில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங்கை முடித்து விடுகின்றனர். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும்போது பல சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது பணம் செலுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அதில், மக்கள் கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery) ஆப்ஷனை விரும்புகின்றனர். ஒருசிலர் அப்பொழுதே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை செலுத்திவிடுகின்றனர். மேலும், சிலர் இ.எம்.ஐ. மூலம் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில், கேஷ் ஆன் டெலிவரியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

அதாவது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாயிலாக பொருட்கள் வாங்கும்போது கேஷ் ஆன் டெலிவரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபற்றி டெல்லி உயர்நீதிமன்றம் புது உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாயிலாக பொருட்கள் வாங்கையில் கேஷ் ஆன் டெலிவரிக்கு தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றி எரியும் மணிப்பூர்…..! ரயில்கள் ரத்து போக்குவரத்து சேவைக்கு தடை…..!

Fri May 5 , 2023
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில் அங்கே கலவரம் வெடித்தது. ஆகவே கலவரம் செய்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெய்டீஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதன் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே இரு பிரிவினருக்கிடையில் மோதல் போக்கு […]
மாநிலம் முழுவதும் ஊரடங்கு..!! 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை கிடையாது..!! பற்றி எரியும் மணிப்பூர்..!!

You May Like