fbpx

இனி ’இந்திய தண்டனைச் சட்டம்’ கிடையாது..!! பெயர் மாற்றம்.. புதிய தண்டனைகள்.. புதிய விதிகள்..!! மக்களவையில் மசோதா தாக்கல்..!!

இந்திய தண்டனைச் சட்டம் என்பதை மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சில முக்கிய விதிகள் மற்றும் தண்டனைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய சட்டத்தில் என்னென்ன விதிகள், என்ன தண்டனைகள் என்பது குறித்து பார்க்கலாம்..

அரசின் நடவடிக்கைகள், நிர்வாகம் அல்லது மற்ற நடவடிக்கைகளின் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் கருத்துக்கள் தெரிவித்தால் அது குற்றமாகும்.

வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, வார்த்தைகளால், எழுதப்பட்ட, காட்சிகள் மூலம், மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, வேறுவிதமாகவோ அரசுக்கு எதிரான செயல்பாடுகளை தூண்டினால் அது குற்றமாகும்.

பிரிவினை அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள் அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அது குற்றமாகும். இத்தகைய செயலில் ஈடுபட்டாலோ அல்லது செய்தாலோ ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், தண்டனைகளுக்கு அபராதத்தோடு சேவை செய்வதையும் தண்டனையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் சிறிய குற்றம் செய்துவிட்டால், அவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கேன்சர் நோயாளிகளுக்கு 2 மாத மருந்து செலவை ஏற்க சொல்லி தண்டனை கொண்டு வரலாம்.

அதேபோல் சில சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு வேறு தண்டனைகள் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. அதாவது, சில சட்டங்களுக்கு மட்டும் பாலின ரீதியிலான தண்டனை வேறுபாடு நீக்கப்பட்டு, எல்லா பாலினத்தவருக்கும் ஒரே தண்டனை என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தில், மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மின்னணு சாதனங்கள் சில குற்றங்களில் நீதிமன்றங்களில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது. அதை மாற்றுவதற்கான விதிகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் “அரசுக்கு எதிரான குற்றங்கள்” ஆகியவற்றுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. பல்வேறு குற்றங்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை, நீதிமன்றங்கள், மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் கடைபிடிக்கப்பட்டு வரும் மொத்த தண்டனை சட்டமும் இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்றும் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்யா ஆகியவை இனி கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. உள்ளே இருக்கும் பல அடிப்படை கூறுகள், அடிப்படை அமைப்புகளும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் காவல்துறையினர் இனி இந்திய தண்டனை சட்டத்திற்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை பயன்படுத்துவார்கள். இதை புரிந்து கொள்ள போலீசார், வக்கீல்கள், மக்களுக்கு சில காலம் எடுக்கும் என்பதால் குற்றவியல் நடவடிக்கைகளில் செயல்பாடுகள் தாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

Chella

Next Post

கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றம்…..! சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்ட இளம் பெண், கொலையாளிகள் யார்…..?

Fri Aug 11 , 2023
தென்காசி அருகே பயன்பாடற்ற கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள வலசை கிராமம் அருகே, சேர்ந்தமரம் சாலையில், கண்டமான் குளம் என்ற குளத்துக்கரை அருகே பயன்படுத்தப்படாத ஒரு பழமையான கிணறு இருக்கிறது. இந்த நிலையில், வேலைக்காக அந்த கிணறு இருக்கும் பகுதி வழியாக, பெண்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கிணற்றில் இருந்து […]

You May Like