fbpx

’இனி பெட்ரோல் போட தேவையில்லை’..!! 100% எத்தனாலில் இயங்கும் இன்னோவா கார் இன்று அறிமுகம்..!!

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று டொயோட்டா நிறுவனத்தின் 100% எத்தனால் எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்னோவா காரை வெளியிடுகிறார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை கக்கும் வாகனங்களை மத்திய அரசு படிப்படியாக கட்டுப்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த கார் அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாற்று எரிபொருளில் இயங்கும் பசுமை வாகனங்களை கொண்டுவருமாறு வாகன உற்பத்தியாளர்களை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி வருகிறார்.

இன்று அறிமுகப்படுத்தப்படும் கார், உலகின் முதல் பிஎஸ்-6 (நிலை-II), எலக்ட்ரிக் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2004 முதல் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக உயிரி எரிபொருளில் ஆர்வம் காட்டத் தொடங்கியதாகவும், இதற்காக தாம் பிரேசிலுக்குச் சென்றதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாம் தற்சார்புடன் இருக்க விரும்பினால், எண்ணெய் இறக்குமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவர வேண்டும். தற்போது இதற்கு ஆகும் செலவு ரூ.16 லட்சம் கோடியாக உள்ளது. நாட்டில் மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியா இன்னும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காற்று மற்றும் நீர் மாசுபாட்டை நாம் குறைத்து, நமது ஆறுகளில் உள்ள நீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இது ஒரு பெரிய சவாலாகும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தீங்கான தாக்கம் குறித்தும் நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார். அவை புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்றார். இயற்கை விவசாயம் நிறைய செல்வத்தை உருவாக்கி நம்மை நிலைத்தன்மையை நோக்கி நகர்த்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஹைட்ரஜனில் இயங்கும் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது எத்தனால் காரை அறிமுகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Chella

Next Post

ஓணம் பாண்டிகையொட்டி மலையாளத்தில் வாழ்த்து சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்…

Tue Aug 29 , 2023
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. கேரள மக்கள் இந்த பண்டிகையி கொண்டாடி வருகிறார்கள். இன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது […]

You May Like